வெங்காயத்துக்கு டப் கொடுக்கும் முருக்கேற்றும் காய்... கண்ணீரில் முரட்டு சிங்கில்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெங்காயத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் பெரும்பாலான உணவுகளில் வெங்காயம் சேர்க்கப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 

இந்தியாவின் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்து வந்த கனமழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்., விளைச்சலின் போதே வெங்காயத்தின் வரத்து அடுத்தடுத்து குறைந்து கொண்டே சென்றது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோயம்பேடு சந்தையில் பல்லாரி வெங்காயத்தின் விலை ரூ.100 க்கும்., சிறிய வெங்காயத்தின் விலை ரூ.120 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்., சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.160 க்கு சென்றது. இதனையடுத்து உள்ள காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் வெங்காயத்தின் விலை மொத்தமாக அதிகரித்தது.

murugaikai, drumstick,

காய்கறி கடைகளில் சாம்பார் வெங்காயம் ரூ.200 வரையிலும்., பல்லாரி ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும்., பெரும்பாலான கடைகளில் சாம்பார் வெங்காயத்தின் விலையை அறிந்து மக்கள் வாங்காமல் செல்வதால் பெரும் சோகத்தில் வியாபாரிகள் இருக்கின்றனர். மக்களும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

இதனைப்போன்று முருகைக்காயின் விலை கிலோ ரூ.340 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாலும்., வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளதும்., பின்னாளில் காய்கறிகளின் விலையும் அதிகரிக்குமோ? என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர். தொடர் மழை மற்றும் விளைச்சல் இல்லாததால் தற்போது விலையானது கடுமையாக அதிகரித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in tamilnadu onion rate is low than drumstick rate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->