பழமையின் அடையாளமாக இருந்த இரயில் பெட்டிகள்.. மதுரை இரயில்வே நிர்வாகத்தின் அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


மதுரை நகரின் பிரதான பகுதியாக இருக்கும் மதுரை இரயில் நிலையத்திற்கு முன்புறம் நேரோ கேஜ் இரயிலினை நினைவுகூரும் விதமாக, நேரோ கேஜ் இரயில் பெட்டியினை பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளார். இதனைப்போன்று நீராவி எஞ்சினையும் நிறுத்தி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையானது அதிகளவு எழுந்தது. தெற்கு இரயில்வேயுடைய அனைத்து இரயில் நிலையத்திலும் மக்களிடம் பறைசாற்றுகிற பழைமை இரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகள் பார்வைக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருச்சி இரயில் நிலையத்தில் ஏற்கனவே பழைமையான இரயில் எஞ்சின்கள் மக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மதுரை இரயில் நிலையத்தில் நேரோ கேஜ் இரயில் பெட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தெற்கு இரயில்வேயில் இருந்து பெறப்பட்டுள்ள நிலையில், மதுரை இரயில்வே கோட்ட மேலாளர் லெனினின் ஆலோசனையில் மக்கள் பார்வைக்காக நேரோ கேஜ் இரயில் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கையில், இரயில் பாதையில் மீட்டர் கேஜ், பிராட் கேஜ் மற்றும் நேரோ கேஜ் பாதைகள் உள்ளது. இந்த பாதைகளுக்கு ஏற்றாற்போல இரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு தண்டவாளத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒருமீட்டர் அகலம் உள்ள நேரோ கேஜ் இரயில் பெட்டியும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் சேவையானது சிம்லா போன்ற பகுதியில் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. 

தற்போது மதுரை இரயில் நிலையத்தில் இதன் பெருமையை விளக்கும் வகையில் டெல்லி அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நீராவி இஞ்சினை இரயில் நிலையத்தின் முன்னர் மக்களின் பார்வைக்காக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் போது, கடந்த 1947 ஆம் வருடத்தில் மதுரைக்கு 225 நீராவி இன்ஜின்கள் இருந்துள்ளது. கடந்த 1968 ஆம் வருடத்திற்கு பின்னர் டீசல் இன்ஜினின் வரவிற்கு பின்னர் நீராவி இன்ஜினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

இந்த நீராவி இன்ஜின் நினைவுக்காக மதுரை இரயில் நிலைய செட்டில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக டெல்லி அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. டெல்லியில் இந்த இரயிலை மக்கள் பார்வையிட அனுமதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் பழைமையான இரயில் எஞ்சின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலும் இதனை மக்களின் பார்வைக்கு நிறுத்த வேண்டும். இது குறித்து இரயில்வே நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in madurai railway division discussed about narrow gauge


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->