திருமணம் முடியும் தருவாயில் பிள்ளைகள்.! வயதுக்கு மீறிய கள்ளக்காதல் மோகத்தால் அரங்கேறிய விபரீத சம்பவம்.!!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலத்தில் உள்ள ஜோதிபுரத்தை சார்ந்தவர் நாகராஜ் (வயது 47). இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

அதே போன்று., ஓசூருக்கு அருகில் உள்ள பாகலூர் பண்ணைப்பள்ளியை சார்ந்தவர் குர்ரப்பா. இவரது மனைவியின் பெயர் பிரேமா (வயது 40). இவர்கள் இருவருக்கும் முனியராஜ் என்ற 24 வயதுடைய மகனும்., நவீன்குமார் என்ற 22 வயதுடைய மகனும் உள்ளனர். 

குர்ரப்பா கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக உடல் நலக்குறைவால் இறந்ததை அடுத்து., நாகராஜ் மற்றும் பிரேமாவிற்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளகாதலாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து அங்குள்ள அண்ணாநகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., வீட்டில் இருந்த பிரேமா மற்றும் நாகராஜ் விஷமருந்தி மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். 

இதனை கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் பிரேமா பரிதாபமாக உயிரிழக்கவே., உயிருக்கு போராடிய நாகராஜை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்கள் இருவரின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து., இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in krishnagiri a illegal affair couple attempt suicide and died police investigation on process


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->