உடலில் காயத்துடன் 6 வயது பெண் குழந்தை.! டியூஷன் ஆசிரியையின் கொடுமையால் அரங்கேறிய துயரம்.! குமரியில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாணவியொருவரின் புகைப்படம்., முதுகு மற்றும் கைகளில் கொடூரமாக தாக்கப்பட்டது போன்ற நிலையில் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த விஷயத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அதிகாரிகள்., காவல் துறையினரிடம் சென்று புகார் அளித்தனர். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில்., காயமடைந்த மாணவி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொத்தேல் புறம் பகுதியை சார்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்துள்ளது. 

மேலும்., இது குறித்த விசாரணையில்., கடந்த வெள்ளிக்கிழமையன்று மாணவி தாம் பயின்று வந்த பள்ளிக்கு தேர்வெழுத சென்ற சமயத்தில்., மாணவி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதை ஆசிரியர்கள் அறிந்துள்ளனர். மேலும்., சிறுமி உடல் நிலை சரியில்லை என்றும் கூறியுள்ளார். 

கன்னியாகுமரி சிறுமியை அடித்து துன்புறுத்திய டியூஷன் ஆசிரியை,

இதனையடுத்து ஆசிரியைகள் சிறுமியின் உடலை பரிசோதனை செய்ததில்., சிறுமியின் முதுகு பகுதியியல் பட்டை பட்டையாகவும்., கைகளில் காயமாகவும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மேற்கொண்ட விசாரணையில்., சிறுமி டியூஷன் பயின்று வரும் ஆசிரியர் சிறுமியை மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க சொல்லி அடித்து துன்புறுத்தியுள்ளார். 

இதனை அறிந்த ஆசிரியர்கள்., குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில்., டியூஷன் ஆசிரியையை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சிறுமியை அடித்ததால் அவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நான்., சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல்., தனது இல்லத்திலேயே வைத்து., அவரது பெற்றோருக்கும் நானே சிறுமியை கவனித்து கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு., ஆசிரியை ஜெஸிமோல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in kanniyakumari child attack by tuition master


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->