கள்ளக்காதலியை சந்திக்க மாங்காய் குடோனிற்கு பெட்ரோல் குண்டு போட்ட பயங்கரம்.. இரவு முழுவதும் தப்பாட்டம் ஆடி, கம்பி என்னும் இளைஞன்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐய்யம்பாளையம் அழகர்பொட்டல் பகுதியில் தனியார் கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கிட்டங்கியில் சம்பவத்தன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நல்ல வேலையாக உயிர்சேதம் இல்லாது இருந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணையில், அங்குள்ள கண்காணிப்பு காமிராக்கள் காட்சியை சோதனை செய்தனர். 

இதை சோதனை செய்யும் போது வாலிபர் ஒருவர் கிட்டங்கியின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாலிபர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, கிட்டங்கியின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை கைது செய்தனர். 

இது தொடர்பான விசாரணையில், அய்யம்பாளையம் அழகர்பொட்டல் பகுதியை சார்ந்தவர் ராஜாங்கம் (வயது 24). இவருக்கும், இப்பகுதியில் வசித்து வந்த திருமணம் முடிந்த பெண்மணி ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு நேரத்தில் கள்ளக்காதலியை சந்திக்க ராஜாங்கத்திற்கு ஆவல் அதிகரித்துள்ளது. 

மேலும், கள்ளக்காதலி வசித்து வரும் தெருவில் ஆட்கள் நடமாட்டம் அதிகளவு இருந்ததன் காரணமாக, மக்களின் கவனத்தை திசைதிருப்ப பெட்ரோல் நிலையத்திற்கு சென்று பெட்ரோல் வாங்கிவிட்டு, மாங்காய் கிட்டங்கியில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதனையடுத்து ஊர்மக்கள் அனைவரும் கிட்டங்கியில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற நிலையில், ராஜாங்கம் தனது கள்ளகாதலியுடன் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளான். 

இந்த விசாரணையின் போது பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்த பாட்டிலை அப்படியே போட்டுவிட்டு ராஜாங்கம் சென்றதை அடுத்து, காவல் துறையினருக்கு பெரும் துப்பு சீட்டாக பெட்ரோல் கேன் இருந்துள்ளது. இதனையடுத்து கண்காணிப்பு காமிராவை வைத்து செய்த ஆய்வின் மூலமாக ராஜாங்கம் சிக்கியுள்ளான்.. இதனையடுத்து நேற்று ராஜாங்கத்தை காவல் துறையினர் கைது செய்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Dindigul illegal affair youngster petrol bomb in mango goods down


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->