வெட்டி பந்தாவிற்கு ஆசைப்பட்டு., சோறு போட்ட கடையிலேயே கைவைத்த ஊழியர்.. நம்பிக்கையால் வந்த வினை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட சான்றோர்பாளையம் காந்திநகர் பகுதியை சார்ந்தவர் கலைச்செல்வம் (வயது 29). இவர் கடலூரில் உள்ள திருப்பதிப்புலியூர் சுப்பராய ரெட்டி தெருவில் இருக்கும் நகைக்கடையில்., நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். 

இவரது கடைக்கு தினமும் வந்ததும் நெக்லஸ்களை கடை ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு., இரவு நேரத்தில் நெக்லஸை லாக்கரில் வைப்பதும் வழக்கமான பணியாக இருந்துள்ளது. இவர் கடந்த 6 வருடமாக பணியாற்றி வந்த நிலையில்., ஆறு வருடத்தில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் கடையின் உரிமையாளரான முரளி., கலைச்செல்வத்தின் மீது அதிகளவு நம்பிக்கையை வைத்துள்ளார். 

jewels,

இந்த நிலையில்., கடந்த சில நாட்களாகவே கலைச்செல்வம் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்த நிலையில்., இவர் விடுமுறை நாட்களில் இருந்த சமயத்தில் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் நெக்லஸ் பிரிவுடைய நகைகளை சோதனை செய்துள்ளனர். இந்த நேரத்தில்., சுமார் 1 கிலோ அளவிலான தங்க நகைகள் குறைவாக இருந்துள்ளது. 

இதனால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளான முரளி கலைச்செல்வதை தொடர்புகொண்ட போது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் இது தொடர்பாக முரளி புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

investigation,

காவல்துறையினரின் விசாரணையை அறிந்த கலைச்செல்வம் தலைமறைவாகவே., காவல் துரையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் கலைச்செல்வனின் இருப்பிடம் குறித்த தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கைது செய்த நிலையில்., சுமார் 97 சவரன் நகை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. 

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்., நெக்லஸ் பிரிவில் பணியாற்றி வந்த கலைச்செல்வம் நகைகளை திருடி நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததும்., இதனால் வரும் பணத்தை வைத்து நண்பர்களுடன் சொகுசு வாழ்க்கையினை அனுபவித்து வந்ததும் தெரியவந்துள்ளது. தனக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in cudallore man arrest due to theft jewels


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->