இரயில் பயணத்தில் ஜன்னலருகே கை வைத்து விரலை இழந்த பெண்மணி... சோழன் அதிவிரைவு வண்டியில் பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கு சரண்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறையில் இருக்கும் தாய் வீட்டிற்கு கடந்த 13ஆம் தேதி வினோத் குடும்பத்துடன் சோழன் விரைவு ரயிலில் சென்று இருக்கின்றார்.

கடலூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் ரயிலானது வந்துகொண்டிருந்த பொழுது ரயிலின் ஜன்னல் கதவு உடைந்து விழுந்துள்ளது. அப்பொழுது ஜன்னல் பக்கம் கை வைத்திருந்த சரண்யாவின் விரல் துண்டாகி இருக்கின்றது. 

இதன் காரணமாக சரண்யா வலியில் அலறி துடிக்க அருகிலிருந்தவர்கள் துணியால் விரலை கட்டியிருக்கின்றனர். அதற்குள் டிடி ஆருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் முதலுதவிப் பெட்டியை கேட்டதற்கு இங்கே முதலுதவி பெட்டி இல்லை என்று தெரிவித்திருக்கின்றார். 

இதையடுத்து மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்த பின்னர் சரன்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in cudallore cholan express train girl finger cut


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->