கோவையில் மீண்டும் பரவும் பன்றிக்காய்ச்சல்.! பரிதாபமாக பலியான இளம்பெண்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் பட்டவையால் பகுதியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பானது தொடர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுகாதார துறையினர் மேலும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க தொடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சமயத்தில்., கேரளாவிற்கு அருகில் இருக்கும் தமிழகத்தின் பகுதிகளுக்கும் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட நிலையில் நீலகிரி., கோயம்புத்தூர்., திருப்பூர் போன்ற மாவட்டங்களில் தொடர் சோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டு., காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொண்டனர். 

இந்த நிலையில்., கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த பெண்மணி ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பூ மார்க்கெட் பகுதியை சார்ந்த சாந்தி என்ற பெண்மணி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காய்ச்சலால் பாதிக்கப்ட்டுள்ளார். 

அங்குள்ள மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்., இவருக்கு மேற்கொண்ட சோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில்., சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த சில நாட்களாகவே உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் காணப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இது குறித்த தகவலை அறிந்த சுகாதார துறையினர் தொடர்ந்து காய்ச்சலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in coimbatore once again started swine flu girl died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->