42 வருட பெரும் பயணம்.. 6 வருட தீவிர தேடல்.. மனதுடைந்து நம்பிக்கையில் வாழ்ந்த தாயார்.. சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள மணலியில் வசித்து வருபவர் தனலட்சுமி. இவரது மகனின் பெயர் ராஜன், டேவிட். இவர்களில் டேவிட்டிற்கு இரண்டு வயதான நேரத்தில்., தனலட்சுமி குடும்பத்துடன் பல்லாவரத்தில் வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., குடும்பத்தின் வறுமையை மேற்கோள்காட்டி தனியார் காப்பாத்தில் தங்கியிருந்து வந்துள்ளார். 

மேலும்., தாயாருடன் - மகன்கள் காப்பகத்தில் தங்கியிருந்தால் பிற குழந்தைகளும் ஏக்கமடையும் என்று எண்ணி மகன்களை காப்பகத்தில் விட்டுவிட்டு சென்று., அவ்வப்போது சென்று மகன்களை சென்று பார்த்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., தமிழகத்திற்கு வருகை தந்த டென்மார்க் தம்பதியின் டேவிட் மற்றும் ராஜனை தத்தெடுத்து சென்றுவிட்டு., சில நாட்கள் கழித்த பின்னர் டேவிட்டின் புகைப்படத்தை தனியார் காப்பகத்திற்கு அனுப்பியுள்ளனர். 

இந்த புகைப்படம் மட்டும் தனலட்சுமியின் நினைவில் இருக்கவே வருடங்களும் கரைபுரண்டு ஓடியுள்ளது. இரண்டு வயதில் தாயாரை பிரிந்து சென்ற டேவிட்டிற்கு தற்போது 42 வயதான நிலையில்., கடந்த 2013 ஆம் வருடத்தில் உண்மையை தெரிந்துகொண்டு தனது தாயாரை தேடி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். தமிழகத்தில் உள்ள சென்னை., தஞ்சாவூர் போன்ற பல இடங்களுக்கு தனியாக சென்று தாயாரை தேடி அலைந்துள்ளார்.

social media, Facebook, twitter, Instagram,

இருப்பினும் தாயாரை கண்டறிய இயலாமல் இருந்த நிலையில்., சிறுவயதில் எடுத்த புகைப்படத்தினை இணையத்தில் பதிவேற்றி உதவி கோரியுள்ளார். இதனை கண்ட தனியார் தொண்டு நிறுவனத்தை சார்ந்த அருண் என்பவர் உதவி செய்த நிலையில்., சுமார் 6 வருட முயற்சிகளுக்கு பிறகு தந்து தாயார் தனலட்சுமியை மணலியில் சிறிய அளவுள்ள வீட்டில் வசித்து வருவதை கண்டறிந்துள்ளனர். 

இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தின் போது வீடியோ கால் மூலமாக டேவிட் தனது தாயரிடம் பேசிய நிலையில்., நேற்று முன்தினந்தன்று தனது தாயாரை சந்திக்க சென்னைக்கு வந்து., தனது தாயாரை நேரில் சந்தித்தார். இருவரும் உணர்ச்சி மிகுதியில் அழுதுகொண்டு இருந்த நிலையில்., தனது தாயை சந்தித்த மகிழ்ச்சியில் மகனும் அழுதது அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்., தமிழ் மொழி தெரியாத டேவிட்டிற்கு உதவியாக மொழி பெயர்ப்பாளர் வந்த நிலையில்., விரைவில் சகோதரர் ராஜனையும் நேரில் அழைத்து வருவதாக கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai son meets mother after 42 years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->