எனக்கு யாரும் இல்லை.. பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்!
I have no one a young man who deceived a girl and got her pregnant
பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துள்ளது .குறிப்பாக பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலில் தொந்தரவு கொடுப்பது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.அதுமட்டுமல்லாமல் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள் போக்சர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல இடங்களிலும் வேலை செய்யும் நிறுவனங்கள் பள்ளி கல்லூரி போன்ற இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலில் வன்கொடுமை என்பது அதிகரித்து தான் உள்ளது.
இந்தநிலையில் ஏமாற்றி கர்ப்பமாக்கிய பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே வெங்கமேடு பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற பிரவீன் தனக்கு யாரும் இல்லை என கூறி கணவரை இழந்த நிலையில், ஒரு மகனுடன் வசிக்கும் 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அந்த பெண் கர்ப்பமானார்.
இதற்கிடையில் பிரவீனுக்கு தாய் இருப்பதை அறிந்த அந்த பெண், பிரவீனின் தாயார் வீட்டிற்கு சென்றார். ஆனால் பிரவீன் தாயார் அந்த பெண்ணை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதற்கிடையில் பிரவீனும் தன்னை ஏமாற்றிவிட்டதாக வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீனை கைது செய்தனர்.
English Summary
I have no one a young man who deceived a girl and got her pregnant