ஒரு வாரம் தனது மனைவியை வேறு வாலிபருக்கு காதலியாக்கிய கணவன்.! வெளியான அதிரவைக்கும் பின்னணி!! - Seithipunal
Seithipunal


சென்னை போரூரில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்தபொழுது அங்கு பணியாற்றிய தனது நண்பர் நந்தகுமாரிடம் அவசர தேவைக்காக வேண்டும் எனக்கூறி 34000 ரூபாயை கடனாக பெற்றுள்ளார். ஆனால் பல நாட்களாகியும் அதனை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

 மேலும் அவர் சென்னை வந்த நிலையில் அவரிடம் நந்தகுமார் பலமுறை பணம் கேட்டு பேசியுள்ளார். ஆனால் அவர் திருப்பிக் கொடுக்காத நிலையில் மனமுடைந்த நந்தகுமார் இதுகுறித்து தனது சகோதரர் அஜித் குமார் என்பவரிடம் கூறியுள்ளார்.

 இதனை தொடர்ந்து அஜித் சதீஷை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார் ஆனால் அவர் சரியானமுறையில் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. பின்னர் அஜித்குமாரின் போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை.

 இந்நிலையில் பணத்தை திருப்பி பெறுவதற்கு சதித்திட்டம் தீட்டிய அஜித் தனது மனைவி இந்துமதியை அவரது வாட்ஸ்அப் எண் மூலம் சதீஷ்குமாரிடம் காதலியைப் போல பேச வைத்துள்ளார்.

 அவரும் சதிஷ்குமாரிடம் பேசி வந்துள்ளார் இவ்வாறு இருவரும் ஒரு வாரம் பேசிய நிலையில் சதீஷ்குமார் இந்துமதியை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ள அதனை தொடர்ந்து இன்று நேரில் சந்திக்கலாம் என கூறியுள்ளார்.

பின்னர் அவரை இந்துமதி போரூர் வரக்கூறிய நிலையில்  அங்கு மறைந்திருந்த அஜித் மற்றும் அவரது நண்பர் ராகுல் இந்துமதியை சந்திக்க வந்த சதீஷை மடக்கிப்பிடித்து கடத்திச் சென்றனர்.

பின்னர் போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அஜித்குமாரின் போன் சிக்னலை ஆராய்ச்சி செய்த போலீசார் அதனை பின்பற்றி சதீஷ்குமாரை மீட்டனர்.மேலும்  அஜித் மற்றும் அவரது நண்பர்  ராகுலை கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband helped wife for act as lover to another youngman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal