அரசு பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம், திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியை மாணவர்கள் குடிநீராகவும் மதிய உணவு சமைப்பதற்காகவும் பயன் படுத்தப்படுகிறது. 

அது போல் இன்று பிற்பகல் சமையல் ஊழியர்கள் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை பிடித்து குழந்தைகளுக்காக சமைத்த போது குடிநீரில் துர்நாற்றம் வீசி உள்ளது. 

இதனால் சந்தேகம் அடைந்த சமையல் ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தபோது அதில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இதனை கேட்டு ஆசிரியர்கள் மற்றும் சமையல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Human waste inside government school water tank Police investigation


கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பதுAdvertisement

கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது
Seithipunal
--> -->