தஞ்சை தொடர்மழை தாக்கம்! தஞ்சையில் 22 வீடுகள் சேதம் - 4 கால்நடைகள் உயிரிழப்பு...!
Heavy rains hit Thanjavur 22 houses damaged Thanjavur 4 cattle killed
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் குறிப்பாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகக் கண் இருளும் வகையில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டித் தீர்த்து மறுநாள் காலை வரை தொடர்ந்தது.
பின்னரும் பகல் முழுவதும் இடைவேளைகளில் பரவலாக மழை பெய்தது.தொடர்ச்சியான இந்த உழை மழை, மாவட்டம் முழுவதும் சுமார் 4,000 ஏக்கரில் புதிதாக நடவு செய்யப்பட்ட இளம் சம்பா–தாளடி நெற்பயிர்களையும், வளர்ந்து கொண்டிருந்த நெற்பயிர்களையும் முழுக்கத் தண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
குறிப்பாக அம்மாப்பேட்டை, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்கள் ஏரிகளாக மாறி, பயிர்கள் இருந்த தடயமே தெரியாத சூழ்நிலை உருவானது.இன்று மழை நிற்க, வெயில் சிறிது வெளுத்து அடிக்கத் தொடங்கியுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு–மூன்று நாட்கள் வெயில் இருந்தால் மட்டுமே நீர் வடியும், அதன்பின் தான் பயிர்களின் உண்மையான சேத நிலை கணக்கெடுக்க முடியும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 13 குடிசை வீடுகள், 9 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 22 வீடுகள் பகுதியளவில் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும், 4 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Heavy rains hit Thanjavur 22 houses damaged Thanjavur 4 cattle killed