தென்மாவட்டங்களில் கனமழை தாக்கம்! -அருவிகளில் குளிக்க தடை மூன்றாவது நாளாக நீடிப்பு...!
Heavy rains hit southern districts Ban bathing waterfalls extended third day
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து தென்மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்கள் நேற்று 2வது நாளாகவும் கனமழையால் நனைந்தன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த இடியுடன் கூடிய மழையால் குற்றாலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு நிலவுகிறது.
மேலும், தொடர்ச்சியான மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.இந்த தண்ணீரின் அதிவேக ஓட்டத்தால் அருவிகளில் குளிக்க தடை 3வது நாளாக நீடிக்கிறது.மேலும், மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவுகள் கூட நீரில் மறைந்து போன அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
பழைய குற்றாலத்தில் கிளைநீர் ஓடைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மாபெரும் நீர்வீழ்ச்சியாக மாறியுள்ளன. நடைபாதைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேசமயம், தொடர்ந்து பெய்த மழையால் நிலம் ஈரப்பதமாகி, விவசாயிகள் தங்கள் வயல்களில் சாகுபடி பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Heavy rains hit southern districts Ban bathing waterfalls extended third day