கனமழை எச்சரிக்கை..10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
Heavy rain warning Schools in 10 districts to remain closed
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில்,கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பத்து மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
English Summary
Heavy rain warning Schools in 10 districts to remain closed