கொடுத்து வைத்த குமரி மக்கள்.. வெளுத்து வாங்கும் கனமழை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டம் குன்னூரில் 12 சென்டிமீட்டர், திருநெல்வேலி மாவட்டம் சேர்வையாறு அணையில் 9 சென்டிமீட்டர், மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்த எச்சரிக்கையின்படி தற்போது குமரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குமரியில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருவதால் குமரி மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என மக்கள் புலம்புகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain occurred in Kanyakumari district


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->