கனமழை எதிரொலி: சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்! - Seithipunal
Seithipunal


சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுபெற்றுள்ளது இதற்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையம் இன்று இரவு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது வானிலை மோசம் அடைந்துள்ளதால் நாளை காலை 9 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விமான நிலைய ஓடுபாதையில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain Chennai airport temporarily closed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->