விழுந்து, புரண்டு, அழுத தலைமை ஆசிரியர்..! ஓட்டம் பிடித்த மாணவர்கள்.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் குஜிலிம்பாறை பகுதியில் இருக்கும்  அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் தரையில் விழுந்து, புரண்டு அழுத சம்பவம் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கின்றது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் குஜிலிம்பாறை ஒன்றியத்தில் உள்ள அய்யம்பட்டி என்ற கிராமத்தில் அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக இந்திரா என்பவர் பணியாற்றி வருகின்றார். 


 
இந்த பள்ளியில் மொத்தமாகவே, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைவு, 2 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். எனவே, என்னால் பாடம் நடத்த முடியாது. என்னை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு அவர் மனு கொடுத்துள்ளார். 

ஆனால், இதற்கு அதிகாரிகள் சரியான முடிவெடுக்காத காரணத்தால் மனமுடைந்த தலைமையாசிரியர் இந்திரா, பள்ளி தரையில் கீழே விழுந்து அழுது புரண்டார். இதனை பார்த்த அந்த இரண்டு மாணவர்களும் மிரண்டு ஓடி இருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

head mister crying in front of school


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->