மீனவர்களை உற்சாகப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!  - Seithipunal
Seithipunal


இன்று தமிழகத்தில், சென்னை திருவொற்றியூர் குப்பம் அருகே இருக்கும் பகுதியில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரை மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம், "இரண்டு ஆண்டுகளில் திருவொற்றியூர் மீன்பிடி துறைமுக பணிகள் நிறைவுபெறும்.

இதன்காரணமாக, மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்." என அவர் தெரிவித்துள்ளார். மேலும், "சென்னை துறைமுகத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம்.

விரைவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்னை துறைமுகம் வரை இருக்கின்றது." என அவர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் மீனவர்கள் மகிழ்சியுடன் காணப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

happy news for fisher man


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->