கொடநாடு வழக்கில் சிக்க போவது யார்.? ஜன.26ல் தமிழகம் வரும் குஜராத் குழு.! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில்  அரங்கேறிய கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தடவியல் ஆய்வுக்கு குஜராத்தை சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் குழு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கை ஏற்று கொடநாடு வழக்கு தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய குஜராத் தடயவியல் நிபுணர்கள் குழு தமிழகம் வர உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக 19 டவர்களில் பதிவான 60 செல்போன்களின் உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் தேசிய தடயவியல் ஆய்வாக பல்கலைக்கழக குழு வரும் ஜனவரி 26 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளது. கடந்த 2017ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கைப்பற்றிய கேசட்டுகளில் உள்ள தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய வரும் 26ஆம் தேதி தடயவியல் நிபுணர்கள் குழு திருச்சி வரவுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Forensic Team come to tn on Jan26 for kodanadu case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->