அரசு மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சைகளை நிறுத்த முடிவு - எப்போது? - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சைகளை நிறுத்த முடிவு - எப்போது?

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் காணொலி மூலமாக நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மதுரை மாநகர சுகாதார அலுவலரை பணிநீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையைக் குறைக்க கோரியும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு தெளிவான உறுதியும் அளிக்கப்படாமல் இருக்கும் நிலையில் உடனடியாக தீர்வு காணும் வகையில் போராட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவர் ஒருவர் பேசியதாவது, "போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 12-ம் தேதி முதல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போவதில்லை. மாநிலம் முழுவதும் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்களை புறக்கணிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட மருத்துவமனைகளில் குடும்பநல அறுவை சிகிச்சைகள் முக்கியமானவை. இதே சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டால் ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவாகும். நடுத்தர, ஏழை மக்களால் இந்த தொகையை செலுத்தி அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இயலாது.

அதனால், இந்த சிகிச்சைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் நிறுத்தினால் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இதுவரைக்கும் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை மட்டும் நிறுத்திய அரசு மருத்துவர்கள், தற்போது அடுத்தக்கட்டமாக தினசரி நடக்கும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை நிறுத்தும் முடிவை எடுத்து போராட்டத்தை அடுத்தக்கட்டத்திற்கு நகரத்தியுள்ளதால் குடும்ப நல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் ஏற்படும். 

தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீட்டு மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திற்கும் இடையே நீடிக்கும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt doctors decision of stop family planning opperation in hospital


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->