தத்தளிக்கும் தென் மாவட்டங்கள் - அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ பதிவாகியுள்ளது.

இது தூத்துக்குடியில் 1000 ஆண்டுகளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். இந்தக் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் இருந்து மழைபாதிப்புள்ள நான்கு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்ததாவது, "சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus run to south districts


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->