கோவில்பட்டி அருகே பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து - தற்காலிக ஓட்டுனரின் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


 கோவில்பட்டி அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கி வந்த அரசு பேருந்thu சாலையோர பள்ளத்தில் விட்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பல்வேறு பணிமனைகளில் தற்காலிக ஒட்டுனரை கொண்டு பேருந்ததுகள் இயக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன் பட்டி வழியாக கோவில்பட்டி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை தற்காலிக ஓட்டுனர் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது, இந்தப் பேருந்து திடீரென பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிகளுக்கு சென்றவர்கள்  உயிர்த்தப்பினர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. மேலும், அனுபவமில்லாத ஒட்டுனர்களை நியமித்து மக்களின் உயிருடன் விளையாடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus accident in kovilpatti


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->