இப்படி விடமுடியாது, விரைவில் முடிவுகட்ட வேண்டும் - சௌமியா அன்புமணி விழிப்புணர்வு பிரச்சாரம்! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி பசுமைத் தாயகம் சார்பில் - செப்டம்பர் 15:  உலகளாவிய காலநிலை நடவடிக்கை நாள் (Global Climate Action Day) விழிப்புணர்வு பிரச்சாரம் - இன்று சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் நடந்தது. இந்த நிகழ்வில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.

செப்டம்பர் 20 அன்று நியூயார்க் ஐநா தலைமையகத்தில் காலநிலை மாநாடு கூட உள்ளது. இந்த மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களை ஒழிப்பதற்கான உறுதியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, செப்டம்பர் 15 முதல் 17 வரை, உலகின் 54 நாடுகளில் சுமார் 650-க்கும் மேற்பட்ட போராட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, சேலம், ஓசூர், ஈரோடு, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலநிலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் “உலக மக்கள் அனைவரும் மாபெரும் பேராபத்தில் சிக்கியுள்ளனர். காலநிலை மாற்றம் தான் இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் முன்புள்ள மாபெரும் சவால். காலநிலையில் மாற்றத்தால் அளவுக்கதிக மழை, பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன! இயற்கை பேரிடர்கள் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும்.

புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அதிகரித்துக் கொண்டே செல்லும் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் உலக அழிவை தடுப்பதற்கான அதிகபட்ச அளவாகும். அதற்கு இன்னும் 7 ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.

புவிவெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்துவதற்கு உலகளவில் வெளியாகும் கரிம உமிழ்வை 2030-க்குள் 50% குறைக்க வேண்டும். 2050-க்குள் நிகர பூஜ்யம் (Net Zero) ஆக்க வேண்டும். அதற்காக, நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் (fossil fuels) பயன்பாட்டிற்கு மிக விரைவில் முடிவுகட்ட வேண்டும். காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள தகவமைப்பு (Adaptation) நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் ‘புதைபடிவ எரிபொருட்களை ஒழிக்க வேண்டும்’ (END FOSSIL FUELS) என்பதை வலியுறுத்தும் பதாகைகளை பிடித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, மீனாட்சி கல்லூரி செயலாளர் கே.எஸ். லட்சுமி, பசுமைத் தாயகம் மாநில செயலாளர் இர. அருள், ஜி.எம். பாலாஜி ரத்தினம், வி. இராதாகிருஷ்ணன், வி. வரதராஜன், நா. கண்ணன், க. பொன்மலை, அசோக் மணவாளன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Global Climate Action Day September 15


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->