மாணவிக்கு எமனாக மாறிய அரியலூர் ஆட்சியரின் கார்.! கண்ணிமைக்கும் நேரத்தில் பகீர்.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூரை சேர்ந்த மாணவி ஒருவர் மீது அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் காரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே நடுதெருவைச் சேர்ந்த கீர்த்திகா என்பவர் அங்கிருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎட் படித்துக்கொண்டு இருக்கின்றார். இந்நிலையில், அவர் தங்களுடைய வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டே இருந்துள்ளார்.

அப்போது, எதிரே சர்வீஸ் ரோட்டில் வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று அந்த மாணவி மீது மோதிபதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மாணவிக்கு தலை, கை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது திருச்சி காவிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Image result for hospital seithipunal

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் மாணவியை மோதியது அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் கார் என்பது தெரியவந்துள்ளது.

விபத்தின்போது ரத்னாவின் காரில் ஆட்சியரின் தாய் மற்றும் தந்தை திருச்சியிலிருந்து அரியலூர் சென்று இருக்கின்றனர். இதையடுத்து கார் ஓட்டுநரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl car accident in perambalur district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->