நாகப்பட்டினத்தில் தோழி விடுதி..ஆளூர் ஷ நவாஸ் MLA அதிகாரிகளுடன் ஆய்வு!
Friends lodge in Nagapattinam Ayalur Sh Nawaz MLA conducting an inspection with officials
நாகப்பட்டினத்தில் பணி புரியும் மகளிர்க்கு தங்கும் விடுதி அமைக்க மாவட்ட ஆட்சியர்அலுவலகம்எதிரில்அதற்கானஇடம்தேர்வுசெய்யப்பட்டுள்ளது.நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷ நவாஸ் ,மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு ப.ஆகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
நாகப்பட்டினத்தில் பணி புரியும் மகளிர்க்கு தங்கும் விடுதி (தோழி விடுதி) அமைக்க வேண்டுமென கடந்த 11-04-2023 அன்று சட்டப்பேரவையில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷ நவாஸ் பேசினார் அதன் பிறகு 13-09-2024 அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் மகளிர்க்கு தங்கும் விடுதி கேட்டு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் வழங்கிய கோரிக்கைகள் பட்டியலிலும் இந்தக் கோரிக்கையை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷ நவாஸ் முன்வைத்தார்.
அதன் விளைவாக நாகையில் பணி புரியும் மகளிர்க்கான தங்கும் விடுதி அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு ப.ஆகாஷ் இ.ஆ.ப மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுடன் அமைவிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் .அப்போது நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷ நவாஸ் உடனிருந்தார்.
English Summary
Friends lodge in Nagapattinam Ayalur Sh Nawaz MLA conducting an inspection with officials