தங்க நகை போட்டா அரசு வேலை இல்ல..! ப்ளீஸ் கழட்டி குடுங்க..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் நகைகளை ஏமாற்றி பறித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு அலுவலங்களின் வாசலில் பெண்களை குறி வைத்து, அவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

அதை நம்பி அவருடன் செல்லும் பெண்களை புகைப்படம் எடுக்க போட்டோ கடைக்கு அழைத்து செல்லும் அந்த நகை மோசடி நபர், புகைப்படத்தில் தங்க நகைகள் அணிந்திருந்தால் வேலை கிடைக்காது என்றும், எனவே தன்னிடம் நகைகளை கழற்றி கொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்து வரும் படி கூறி, நகைகளை சுருட்டிச் சென்றுள்ளார். இதே பாணியில் கைவரிசை அதிகரிக்கவே எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் அந்த நபர் செல்வதை அவரின் செல்போன் சிக்னல் மூலம் தெரிந்துகொண்ட போலீசார், மூங்கில்துறைப்பட்டு போலீசாருக்கு  உடனே தகவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் வாகன தணிக்கை நடந்தி இருசக்கர வாகனத்தில் வந்த மோசடி நபரை கைது செய்தார்கள்.

வேலூரை சேர்ந்த சேகர் என்ற அந்த நபரிடம் இருந்து 27 சவரன் நகைகள், 20 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் ஏமாற்றப்பட்டவர்களின் ஆதார் உள்ளிட்ட சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fraud by saying gave job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->