கிருஷ்ணகிரி || கடன் வாங்கியவர் கடத்தி தாக்குதல் - பாஜக பெண் நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, உப்கார் லே அவுட் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் ப்ரியா என்பவரிடம் 11 லட்சம் ரூபாயும், பாஜக இளைஞரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மங்களா என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.

ஆனால், மாதேஷ் கடந்த மூன்று மாதங்களாக இரண்டு பாஜக பெண் நிர்வாகிகளுக்கும் வட்டி, அசல் எதும் செலுத்தாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில், மாதேஷ் நேற்று ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார். இதையறிந்த மங்களா மற்றும் அவரது கணவர் தாசப்பா உள்ளிட்டோர் மாதேஷை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த தகவல் அறிந்த, பாஜக பிரமுகர் ப்ரியா தனது கணவருடன் வந்து பணத்தைக் கேட்டு மாதேஷை தாக்கியுள்ளார். மேலும், பாஜக இளைஞரணி மாநில செயலாளர் கிஷோர் உட்பட மூன்று பேர் சேர்ந்து மாதேஷை ஒசூர் மலைக்கோயிலுக்கு அழைத்து சென்று உடனடியாக பணத்தை தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். 

அவர்களிடம் இருந்து தப்பிய மாதேஷ் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி, பாஜக பெண் நிர்வாகிகளான ப்ரியா, மங்களா மற்றும் பிரியாவின் கணவர் ஆனந்த், மங்களாவின் கணவர் தாசப்பா உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கிஷோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for attack man in krishnagiri


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->