12-ம் வகுப்பு துணைத்தேர்வு மாணவர்களுக்கு.. நாளை முதல் ஹால் டிக்கெட்.. தேர்வுத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன.

இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

ஜூலை 25-ம் தேதி 12ம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், http://dge.tn.gov.in இணையதளத்தில் நாளை பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டுகளை விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

For 12th class supplementary examination students Hall ticket from tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->