அதிரடி உத்தரவிட்ட அரசு போக்குவரத்து கழகம்..மகிழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்கள்..! - Seithipunal
Seithipunal


நாட்டுப்புற கலைஞர்களின் கலைப்பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல, தமிழக அரசு பேருந்துகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவித்ததாவது, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில், 50 சதவீத பயண கட்டண சலுகையுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் பயன்படுத்தும் கலைப்பொருட்களை கட்டணமில்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நாட்டுப்புற கலைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஏற்று, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்கள், அரசு பேருந்துகளில், தொழில் முறையாக பயணம் செய்யும் போது, 50 சதவீத பயணக் கட்டண சலுகை பெறலாம்.அவர்கள் எடுத்து வரும் இசைக் கருவிகள், தொழில் கருவிகளை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தப்பாட்டம், மாடு, மயில், காவடி, கரக ஆட்டங்கள், பொய்க்கால் குதிரை, கொல்லி கட்டை, நையாண்டி மேளம், நாதஸ்வரம், பம்பை, உருமி, உடுக்கை, ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், தவில் மற்றும் சிறிய அளவிலான கருவிகளையும் இலவசமாக எடுத்துச் செல்லலாம். அவர்களின் சலுகை கட்டண பயணம், எடுத்துச் செல்லும் கருவிகளின் விபரங்களை வழிப்பட்டியலுடன் இணைத்து அலுவலகத்தில் ஓட்டுனர்கள் சமர்பிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பயணத்தை, மதுரை, கும்பகோணம், கோவை, சென்னை, விழுப்புரம், சேலம் கோட்ட பேருந்துகளிலும் அனுமதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்களுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Folk artists instrument free travel in all government bus


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->