பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தோடு தனுஷ் கோடிக்கு வந்த இலங்கை அகதிகள்.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தோடு தனுஷ் கோடிக்கு வந்த இலங்கை அகதிகள்.!

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்து உள்ளது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட முடியாமல் சிரமத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்காக இந்தியா சார்பில் அவ்வப்போது உதவிக்கரம் செய்யப்பட்டு வருகிற்௫து. இருப்பினும் பொருளாதார நெருக்கடியை அரசினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக பொதுமக்கள், தங்களிடம் உள்ள உடமைகள் மற்றும் நகைகளை விற்றுவிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துகொண்டு இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி செல்கின்றனர்.

இந்நிலையில், இலங்கை வவுனியா தேக்கன் தோட்டம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் தனது குழந்தைகளுடன் படகு மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் அகதிகளாக வந்திறங்கி உள்ளனர்.

இதையறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் அகதிகளை ஐந்து பேரையும் மீட்டு மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five migrants reached dhanushkodi from srilanga


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->