தனி கட்சி தொடங்கும் மீனவர்கள் - பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


நீண்ட காலமாகவே தமிழக மீனவர்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் சிக்கும் மீனவர்களை காப்பாற்றுவதிலும் தாமதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், மீனவர்கள் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும் தங்களுக்கு என்று தனி அரசியல் கட்சி உருவாக்குவதற்கு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய அனைத்து மீனவர் சங்கத் தலைவர் நாஞ்சில் ரவி, "தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களையும் ஒருங்கிணைத்து கட்சி தொடங்க இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் 610 மீனவ கிராமங்களையும் ஒரே தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து மீனவர்களின் நலன்களுக்கு என தனி கட்சி அமைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள மீனவ கிராமங்களை ஒரே தலைமையில் ஒருங்கிணைப்போம். இதற்காக சட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மீனவர்களை காக்க தவறிவிட்டது. அதனால், எங்களது நலன்கள் மற்றும் உரிமையை காக்க நாங்களே கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். இனி அரசியல் கட்சிகளை நம்பி எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fishermans start new political party in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->