மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!! கவலையில் மீனவர்கள்!! - Seithipunal
Seithipunal


மத்திய மற்றும் மாநில அரசுகள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, ஆண்டுதோறும் 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. புதுச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் 60 நாட்களுக்கு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு வலையில் பெரிய மீன்கள் கிடைப்பதில்லை என புதுச்சேரி மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். பொதுவாக புதுச்சேரி கடலை பொறுத்தவரை வழக்கமாக 10 மைல் தூரத்திலேயே விலை அதிகம் போகும் மீன்களை பிடிப்பது வழக்கம் ஆனால் தற்போது ஆழ்கடலுக்கு சென்றாலும்  வலையில் சிறிய மீன்கள் மட்டுமே கிடைப்பதாக மீனவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

சிறிய மீன்கள் கிடைத்தாலும் மீனவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக புதுச்சேரி கடலில் 15 மைல் தூரம் சென்றால் மத்தி கவளை மீன் மற்றும் காரை மீன்கள் மட்டுமே கிடைக்கிறது. மத்தி கவளை மீன்களை கேரளா மக்கள் அதிகம் விரும்பி உண்பதால் அந்த மீன்களை கேரள வியாபாரிகள் ஆர்வத்துடன் ஏலம் எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fisher man


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->