மீன்பிடி தடைக்காலம்: காசிமேட்டில் வஞ்சிரம் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை..! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 15-ந்தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. 61 நாட்கள் நீடிக்கும் மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகுகள் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். ஏனென்றால், இந்த நாட்கள் தான் மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதாலும், அதற்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிறியவகை பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருவதால், குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வருகின்றன. இதனால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. இதில், விடுமுறை நாளான இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் கடுமையாக மீன் விலை உயர்ந்து, வஞ்சிரம் கிலோ 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சங்கரா மீன் 500 ரூபாய்க்கும், கொடுவா மீன் ரூ.600 க்கும், இறால் ரூ.500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மீன்பிடி தடை காலத்தால் இன்று குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில், இன்று அதிகாலை முதலே மீன் பிரியர்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fish rate hike in Kasimedu market vanjaran fish Selling up to 2 thousand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->