மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவர் மீது சரமாரி தாக்கல்..! - Seithipunal
Seithipunal


மணல் திருட்டை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் மணல் கொள்ளை ஏற்பட்டுள்ளதாக புகார்கள்வந்தவண்ணம் இருந்தன. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பதிவு செய்துள்ளார்.

மேலும்,  காவல்துறையினருக்கு தகவல் அளித்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார். டிராக்டரை எடுத்து செல்லும் வழியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 3 பேரும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மூவரும் சேர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

File a volley on the village administration officer who stopped the sand robbery


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->