வேறோருவருடன் நள்ளிரவு பேச்சு., மனைவியின் செயலால் மனமுடைந்த கணவன்..!! குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அவலம்..!! - Seithipunal
Seithipunal


மனைவி வேறொருவருடன் பேசிவந்ததால் மனமுடைந்த கணவனை குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு திருமணமாகி முருகேஸ்வரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். முருகன் அந்த பகுதியில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென புயல் வீச தொடங்கியது. முருகேஸ்வரி இரவு நேரங்களில் யாருடனோ நெடு நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டமுருகன் மனைவியை கண்டித்துள்ளார்.
இருப்பினும் முருகேஸ்வரி கேட்காமல் தன் செயலை தொடர்ந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் முருகன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவதன்று முருகன் தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father commits suicide after killing children


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal