மின்வேலியை அகற்ற முயன்ற விவசாயி.! மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் மின்வேலியை அகற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (62). இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வந்தார். இந்நிலையில் பயிர்களை மான், காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் சேதப்படுத்தி வந்ததால் வயலை சுற்றி செல்வராஜ் மின்வேலி அமைத்திருந்தார்.

இதையடுத்து செல்வராஜ் அந்த மின்வேலியை அகற்ற முயன்றபோது, எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed by electrocution in Perambalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->