மோடியின் காலில் விழுந்தாரா ஓபிஎஸ்?! வெளியான பரபரப்பு தகவல்!!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தங்க.தமிழ்ச்செல்வனும், அதிமுக சார்பில் துணைமுதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார்.

இதனை தொடர்ந்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஏப்ரல் 18 ஆம் தேதி பாராளுமன்ற வாக்கப்பதிவு நிறைவடைந்தது. இருப்பினும் சில தொகுதிகளில் சர்ச்சை நீடித்ததால் மறுவாக்குப்பதிவு நேற்று மே 19 ஆம் தேதி நடைபெற்றது. 

Image result for evks elangovan seithipunal

இந்நிலையில், நேற்று தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது மகனை வெற்றிபெற வைக்க, ஓபிஎஸ் மோடியின் காலில் விழுந்ததாக கூறினார்.

மேலும் மறுவாக்குப்பதிவுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்காத நிலையில், துணை முதல்வரின் சூழ்ச்சியாலேயே மறுவாக்குப்பதிவு நடைபெறுவதாக குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

evks elangovan says about ops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->