ஆன்லைனில் லோன்.. ஆபாசமாக மாற்றிய புகைப்படம்.! மனைவி எடுத்த திடீர் முடிவு.!
Erode women missing case make shock history
வெங்கடாசலம் என்பவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்து நம்பியூர் இருகாலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் டிரைவராக இருந்து வருகிறார்.
இவரது மனைவி மோகனசுந்தரி. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் வெங்கடாசலம் தனது மனைவியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும், நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், தன்னுடைய மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி இருப்பதாகவும், அந்த ஆன்லைன் ஆப் ஊழியர்கள் மோகனசுந்தரியின் போன் நம்பரை ஹேக் செய்து போனில் இருந்த தங்களது நன் பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மோகனசுந்தரின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார்.

மோகனசுந்தரி அவருடைய மூத்த மகனுடன் கோவிலுக்கு போவதாக கூறிச் சென்றுள்ளார். கோவிலுக்கு சென்ற மோகனசுந்தரி வீட்டுக்கு வரவில்லை என்றும், அக்கம் பக்கத்தில் அவரது உறவினர்கள் வீடுகளிலும் அவரை தேடி அவர் காணவில்லை எனவும், தனது மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரி நம்பியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மோகனசுந்தரிக்கு ஆன்லைன் செயலியில் கடன் கொடுத்த ஆன்லைன் ஆப் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது கணவர் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Erode women missing case make shock history