திடீர் திருப்பம்! ஜாபர் சாதிக்கிற்கு அதிர்ச்சி குடுத்த அமலாக்கத்துறை! மனைவி,தம்பி மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் தம்பி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜாபர் சாதிக் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் செய்து சிறையில் அடைத்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பது உறுதியானது. அதனை அடுத்து அமலாக்கத்துறை ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்தது.

ஜாபர் சாதிக்கிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்தனர். இது தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு மீதும் தம்பி முகமது சலீம் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாபர் சாதிக்கின் சட்டவிரோத பணபறி மாற்றத்திற்கு உடனடியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறையில் இந்த நடவடிக்கை எதிர்த்து இருவரும் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Directorate registered a case against Zafar Sadiq wife and younger brother


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->