இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் ஏழு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருமல் மருந்து குடித்ததால் குழைந்தைகள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கோல்ட்ரிப்' என்ற இருமல் மறந்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழகம் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனம் தயாரித்த மருந்தாகும். இந்த சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச மாநில தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதாவது, கொலையில்லாத மரண சம்பவத்தை விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய 02 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கில் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாரசியா ஜிதேந்திர ஜாட் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகோட்டின் மேஸ்ராம் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய தனிப்படை போலீசார் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் என்பவரை சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜூனா நகர் 02-வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஸ்ரேசன் பார்மா மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்தியில் இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், மருந்து கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன், அண்ணா நகர், பல்லாவரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate raids cough medicine company owner Ranganathans house and several other places


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->