மதுரையில் பரபரப்பு... அரசு பேருந்து மீது அறுந்து விழுந்த மின்கம்பி - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றத்துக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்து திருப்பரங்குன்றம் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, தாழ்வாக சென்ற மின்கம்பி பேருந்து மீது உரசியதுடன், அந்தக் கம்பி அறுந்து பேருந்தின் மீது விழுந்தது.

இதையறிந்த பேருந்து ஒட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி விட்டு பயணிகளை உடனடியாக கீழே இறக்கி விட்டார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் சம்பவம் தொடர்பாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து மின்கம்பிகளை சீரமைத்தனர். அதன் பின்னர் பேருந்து அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இதுபோன்று மின்கம்பிகள் தாழ்வாக செல்வதாக, அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். மதுரையில் அரசு பேருந்து மீது மின்கம்பி உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electric wire fell down on government bus in madurai


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->