கொட்டித் தீர்க்கும் மழை - மின்வாரியம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்காலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை காட்டிலும் மின்சாரம் பாய்ந்து இறக்கும் நிகழ்வுகளே அதிகம் நிகழும். 

இந்த நிலையில், மழைக்காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்வாரிய தனது எக்ஸ் தளத்தில் தியேறிவித்துள்ளதாவது:- 

‘’கீழே விழுந்த மின்கம்பிகள் அல்லது மின் கம்பங்களின் அருகில் செல்லாமல் விலகி இருக்கவும். அப்படி காணும் பட்சத்தில் எச்சரிக்கை அடையாளம் செய்து மின்னகம் எண் 94987 94987 என்ற எண்ணுக்கு அழைக்கவும். மின் கம்பம், மின்மாற்றி, பகிர்மான பெட்டி உள்ளிட்டவற்றின் அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

தரமற்ற பிவிசி வயரை கொண்டு வீட்டிலிருந்து அருகில் உள்ள கொட்டகைக்கோ அல்லது கழிவறைக்கோ கொண்டு செல்ல வேண்டாம். மாடிகளில் துணி உலர வைக்கும் போது மின் கம்பி மேலேயும், அருகிலும் இல்லை என்பதை உறுதி செய்யவும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electric board important announce to peoples for rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->