தமிழகத்தில் காலையில் நடந்த கோர சம்பவம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கோவை பேரூர் செட்டி வீதியில் வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் பக்கத்தில் இருந்த ஓட்டு வீடுகளும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து  சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உள்பட 6 பேரை காயங்களுடன் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஸ்வேதா என்ற 27 வயது பெண், கோபால்சாமி என்ற 70 வயது முதியவர் என இருவர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவையில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கோபால்சாமி மற்றும் ஸ்வேதா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். 

விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்துள்ள முதல்வர் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edppadi palanisami condolence to coimbature incident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->