நாசாவுக்கு செல்ல தகுதி பெற்று பணமில்லாமல் தவித்த ஏழை மாணவிக்கு உதவிய முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் கருப்பட்டிபாளையத்தை கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அபிநயா, இவர் கோ ஃபார் குரு என்ற ஆன்லைன் தேர்வின் மூலமாக நாசா விண்வெளி மையத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அபிநயாவுக்கு பண வசதி இல்லாமல் தவித்து வந்தார். 

அபிநயா பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருவது குறித்து செய்தி வெளியான நிலையில், நாசா செல்லும் மாணவிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். விண்வெளித்துறையில் சாதனை படைத்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாணவிக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஏற்க்கனவே மின்சாரத்துறை அமைச்சர் தங்க மணி, மாணவியின் குடும்பத்தினரை அழைத்து 2 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy helps to ninth student to go nasa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->