அதிரும் புதுக்கோட்டை! சிக்கியது முக்கிய ஆவணங்கள்! ராமச்சந்திரனை ரவுண்டு கட்டும் ED! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதேபோன்று அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீட்டில் நடைபெற்ற சோதனையும் நிறைவு பெற்றுள்ளது.

தற்போது ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆடிட்டர் அலுவகலங்களில் மட்டும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் நேரில் ஆஜராகும் வரை இந்த சோதனை தொடரும் என அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மற்ற இடங்களில் சோதனை முடிந்த நிலையில், ராமச்சந்திரனின் நிஜாம் காலனி அலுவலகத்தில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.

அதே வேளையில் புதுக்கோட்டையில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் கரிகாலனின் குடும்ப உறவினர் அருண் சத்யம் என்பவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மிளகாய், மல்லி மொத்த விற்பனை செய்தும் வரும் அருண் சத்யம் தமிழக அரசு ஒப்பந்தங்கள் எடுத்து சப்ளை செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. தொழிலதிபர் ராமச்சந்திரனை மையமாக வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED seized Important documents from Ramachandran house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->