கரிகாலன் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்! பூட்டை உடைத்து நுழைந்த ED! புதுக்கோட்டையில் தொடரும் பதற்றம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை சோதனை சுமாார் 31 மணி நேரத்திற்கு பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது. தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் மணல் குவாரி டெண்டர் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

அதேபோன்று மணல் ஒப்பந்ததாரர் ரத்தனத்தின் உறவினரான கரிகாலன் வீட்டில் இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வந்த அமலாக்கத் துறையினரின் சோதனை 10 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு பெற்றுள்ளது. கரிகாலன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர் என பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் கரிகாலன் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

அந்த வகையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் கரிகாலன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் என்பவரின் அலுவலகத்தில் அமலாக்க துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது கர்ணனின் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் காவல்துறையினர் உதவியோடு பூட்டை உடைத்து அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது மாவட்டம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raid govt contractor karnan office in pudukottai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->