#BREAKING:: தமிழகத்தை உலுக்கிய பண மோசடி வழக்குகள்.."களத்தில் இறங்கும் அமலாக்கத்துறை".. சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை உலுக்கிய மூன்று பெரிய நிதி நிறுவன மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்க முடிவு..!!

ஆருத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவு நிறுவனங்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆருத்ரா நிறுவனம் தமிழக முழுவதும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேரிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தமிழக முழுவதும் சுமார் 80 ஆயிரம் பேரிடமிருந்து ரூபாய் 4000 கோடியை முதலீடாக பெற்று மோசடி செய்துள்ளது. நிஜாமூன் நிறுவனமும் தமிழக முழுவதும் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த 4000 கோடி  ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து மோசடி செய்து பெற்ற பணங்களை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளன. இது தொடர்பாக இந்நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொண்ட பண பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்கள் அமலாக்கத் துறைக்கு கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நிறுவனங்களின் விவரங்களை வழங்குமாறு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் கேட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த நிறுவனங்களில் இயக்குனர்கள் மற்றும் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதாலும், வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாலும் அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. 

இதன் காரணமாக மோசடியில் ஈடுபட்ட மூன்று நிறுவனங்களின் ஆவணங்கள், தற்போது வரை நடைபெற்ற விசாரணையின் ஆவணங்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அமலாக்க துறையிடம் முதற்கட்டமாக வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு பண பரிவர்த்தனை மற்றும் முதலீடு குறித்து உறுதி செய்யப்பட்டால் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டால் பல முக்கிய அரசியல் புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED is going to investigate Arudhra IFS HIJAU financial bfraud cases


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->