கைரேகை சிக்கியதால் அதிரடி திருப்பம்...! விசாரணையின் போது கழுத்தை அறுத்துக்கொண்ட குற்றவாளி...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியை பிடித்து விசாரிப்பதற்காக தனிப்படை காவலர்கள் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரியா அந்தோணி ஆக்னல் (31). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 30 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும் இவர் பதிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த மே மாதம் திருச்செந்தூர் அருகே சோனகன்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மரியா அந்தோணி ஆக்னல் பதுங்கியிருப்பதாக தனிப்படை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த காவலர்கள், வீட்டை சுற்றிவளைத்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது தப்பிச்செல்ல முயன்ற மரியா அந்தோணி ஆக்னலை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மைக்காலமாக நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடங்களில் பதிவான கைரேகைகளையும் சேகரித்து ஆய்வு செய்தனர்.அப்போது கிடைத்த கைரேகைகள் மரியா அந்தோணி ஆக்னலின் கைரேகைகளுடன் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க தனிப்படை காவலர்கள் முடிவு செய்தனர்.இதன்படி நேற்று முன்தினம் மரியா அந்தோணி ஆக்னல் தங்கியிருந்த வீட்டுக்கு தனிப்படை காவலர்கள் சென்றனர். காவலர்கள் வருவதை பார்த்ததும் அவர் திடீரென அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது தன்னிடம் வைத்திருந்த பிளேடை எடுத்த அவர், எதிர்பாராத விதமாக தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கழுத்தில் படுகாயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்த மரியா அந்தோணி ஆக்னலை காவலர்கள் உடனடியாக மீட்டனர்.

பின்னர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருட்டு வழக்கில் விசாரணைக்கு சென்றபோது சரித்திரப் பதிவேடு குற்றவாளி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dramatic twist fingerprints were found culprit slit his throat during interrogation


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->