விலா பகுதியில் பாய்ந்த குண்டுடன் வாழ்ந்து வரும் மாவீரன் - வாக்குறுதி அளித்த மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


1986 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்ய கோரி, அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் (கடலூர் மாவட்டம்) சேத்தியாத்தோப்பு கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் அப்பகுதி வன்னிய பெருமக்களால் நடத்தப்பட்டது.

கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைக்கும் நோக்கோடு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் காவல்துறையினர். இதில், சேத்தியாத்தோப்பு, தட்டானோடையை சார்ந்த செல்வராஜ் என்பவர் விலாப் பகுதியில் குண்டடிபட்டு மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பெருமுயற்சியால் பெரியதோர் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.

அதோடு மட்டுமல்ல அவருக்கு சிகிச்சை அளித்த வகையில் உடல் பின் பகுதி என்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது போன்று தழும்பு ஏற்பட்டிருந்தது. அந்தத் தழும்பு உடன் மேலாடை அணியாத தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தின் போஸ்டர்கள் தான் தொடர் சாலை மறியல் போராட்டத்தின் பொழுது தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தட்டானோடை செல்வராஜுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தொலைபேசியில் பேசியதாக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த முகநூல் பதிவில், 

"சேத்தியாத் தோப்பு மறியல் போராட்டத்தின் போது  காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விலா பகுதியில் பாய்ந்த குண்டுடன்  வாழ்ந்து வரும் மாவீரன் தட்டானோடை செல்வராஜ் பற்றிய நினைவுகள் வந்தன.  உடனடியாக அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். மனைவி, மகன் மற்றும் மகள் குறித்து நலம் விசாரித்தேன்!

எனது தொலைபேசி அழைப்பால் தட்டானோடை செல்வராஜ் மகிழ்ச்சியடைந்தார். அவரது மகன் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருப்பதாக தெரிவித்தார்.  செல்வராஜின் மகனுக்கு  வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக  வாக்குறுதி அளித்தேன். அது நிறைவேற்றப்படும்" இவ்வாறு அந்த பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About thattanodai selvaraj


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->